தமக்கு வழங்க முயற்சிக்கப்பட்ட 5 மில்லியன் டொலர் இலஞ்சம்: சந்திரிகா வெளியிட்ட தகவல்
தான் பிரதமராக இருந்த போது, தனது அமைச்சரவையில் இருந்த இளைய அமைச்சர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் வழங்க முன்வந்ததாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் முதலீட்டாளர் ஒருவருடனான ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்காக அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர்
எனினும், தாம் அதனை நிராகரித்ததுடன், குறித்த நபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலஞ்சத்தை நிராகரிக்கும் பலம் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும் என்று குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தனது அமைச்சரவையில் இருந்தபோது, இலஞ்சம் பெறலாம் ஆனால் பிடிபடக்கூடாது என்று ஒருமுறை தம்மிடம் கூறியதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதிகள்
இதன் விளைவாகவே பல அரசியல்வாதிகள் திருடியதாகவும் கைது செய்யப்படவில்லை என்றும் குமாரதுங்க கூறியுள்ளார்.
இந்தநிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் உரையாற்றினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |