நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கு ராஜபக்சர்களே காரணம்: சந்திரிகா குற்றச்சாட்டு
"நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கு ராஜபக்சர்களே முழுக்காரணம். இதை எவரும் மறுதலிக்க முடியாது." என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ராஜபக்ச யுகம்

மேலும் தெரிவிக்கையில்,"ராஜபக்ச யுகம் மீண்டும் ஏற்பட மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியும் வளமிக்க எமது நாட்டைச் சீரழித்துவிட்டது. ஒட்டுமொத்தத்தில் ராஜபக்ச குடும்பமே எமது நாட்டு வளங்களைச் சுரண்டித் திண்டு விட்டனர்.
மக்களால் முடிவு
ராஜபக்சர்களின் ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்கள், தங்கள் குற்ற உணர்வை உணர்ந்து கொதித்தெழுந்தமையால் தான் ராஜபக்சர்களின் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும், ஏதோவொரு வழியில் மீண்டும் தங்கள் ஆட்டங்களைக் காண்பிக்க ராஜபக்சவினர் முயல்கின்றனர். இதற்கு எவரும் துணைபோகக்கூடாது. அமைச்சரவையில் ராஜபக்சர்கள் எவரும் அங்கம் வகிக்க இடமளிக்கக்கூடாது.
விரைவில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். நிலையான அரசு அமைய
வெளியிலிருந்து எனது பங்களிப்பை வழங்க நான் தயாராகவுள்ளேன்"என கூறியுள்ளார்.
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri