சந்தோஷ் நாராயணனிடம் சந்திரசேகர் விடுத்த வேண்டுகோள்
வடக்கில் கலைத்துறையை மேம்படுத்தத் தென்னிந்தியக் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது துணைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு இன்று(22.05.2025) வியாழக்கிழமை வருகை தந்து, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்தனர்.
அமைச்சர்களான ஹர்ஷன நாணயக்கார, சரோஜா போல் ராஜ் மற்றும் கே.இளங்குமரன், வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா, ஜே.ரஜீவன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
முதலீடுகள்
இதன்போது இலங்கையின் கலைத்துறைக்கு இந்தியத் தரப்பின் பங்களிப்பு மற்றும் முதலீடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கலைதுறை சார்ந்த விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி இந்திய கலைத்துறையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறும் அமைச்சர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
