தனியாக படகு சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்! சிவநேசதுரை சந்திரகாந்தன் (video)
கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனித் தமிழ் கட்சியாக படகு சின்னத்தில் போட்டி போடுகின்றோம், மொட்டுக்கோ அல்லது யானைக்கோ அடைவுவைக்கப்பட்ட கட்சியல்ல, எனவே கிழக்கு மாகாணத்தை நேசிக்கின்ற எல்லா தமிழ் கட்சிகளும் எங்களுடன் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் நேற்று (05.02.2023) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எப்போதும் இணக்கப்பாட்டு அரசியலை செய்து மக்களை கட்டியெழுப்ப எண்ணுகின்றது.
நாங்கள் நீண்டகால வரலாற்றில் போராடியதன் காரணமாக அந்த போராட்டத்தின் வலிமையும், போராட்டத்தை நம்பியதால் அரசியல் பக்கம் பார்க்காமல் விட்டதால் எங்களுடைய இடங்கள் கறுப்பாக ஆகிவிட்டது.
அதனால் எங்கள் கல்வி பின்னோக்கி தள்ளப்பட்டதுடன் பொருளாதாரம் கீழ்நோக்கி சென்றுள்ளது.
இதை உணர்ந்த நாங்கள் அரசியலையும், அரச நிர்வாகத்தையும் அரச பலத்தையும் சமமாக கையாண்டு கொண்டுதான் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தூரநோக்கில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
