இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்! சுதத் சமரவீர
கொரோனா வைரஸிக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு உள்ளது என இலங்கையின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த தடுப்பூசிகள் மிக உயர்ந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ளன என்ற உறுதி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அந்த தடுப்பூசிகள் விரைவில் இலங்கையால் இறக்குமதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் வைத்திய கலாநிதி சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஒக்ஸ்போர்டு- எஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசர்-பயோ என்டெக் தடுப்பூசிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கொரோனா நோய் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனிபெர்னாண்டோபுள்ளேயும் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.