அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும்: ராகலை நகரில் போராட்டம்
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டும் மழைக்கு மத்தியில் ராகலை நகரில் குறித்த போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.
இராகலை அஞ்சல் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன், பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் இராகலை முருகன் கோவில் வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளது.
அதற்கு உடனடி தீர்வு வேண்டும். இனியும் காலம் இழுத்தடிக்கப்படக்கூடாது என
அதிபர், ஆசிரியர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






