அநுர அரசுக்கு எதிரான பேரணியில் கலந்துகொள்ளாத சம்பிக்க அணி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அரசுக்கு எதிரான பேரணி
"எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுவது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஓர் அநாவசியமான பேரணி.

இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
பேரணிகள், போராட்டங்களினால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. அத்துடன், எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கொள்கைத் திட்டம் ஏதும் கிடையாது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதாயின், முதலில் எதிர்க்கட்சிகளிடம் ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கைத் திட்டம் இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டள்ளார்.
மேலதிக தகவல்- அமல்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam