623 பொருட்களுக்கான வைப்புத்தொகை அதிகரிப்பால் நாட்டில் கறுப்பு சந்தை உருவாக அதிக வாய்ப்பு - சம்பிக்க
623 பொருட்களுக்கான வைப்புத்தொகை அதிகரித்திருப்பதால், நாட்டில் கருப்பு சந்தை உருவாகுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் இது அரசாங்கத்தின் தோல்வியை மீண்டும் காட்டுகிறது.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் தற்போது அரசாங்கம் இருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கியால் 623 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வைப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கறுப்பு சந்தை உருவாகுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.