அரசாங்கம் வறிய மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது: சம்பிக்க சாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வறிய மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இந்த நாட்டில் புதிதாக 27 இலட்சம் வறிய மக்கள் உருவாகியுள்ளனர்.
மனிதாபிமான பேரவலம்
இலங்கை மனிதாபிமான பேரவலத்தை எதிர்நோக்கி வருகிறது. சேலைகளை அல்லது சில ஆடைகளை வழங்கி மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றியீட்ட முடியாது.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தல், செலவுகளை குறைத்தல் போன்றவற்றை சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், இல்லாவிட்டாலும் கடன் மறுசீரமைப்பு என்பது செய்ய வேண்டியவை.
வரிசை காத்திருப்பு
வரிசை காத்திருப்புக்கள், உரத்தட்டுப்பாடு நீக்கப்பட்டமை, வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டமை போன்ற காரணிகளினால் நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட தரப்பினர் கூறி வருகின்றனர்.
எனினும் மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தொலைபேசிக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளினால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
