நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப சம்பிக்க அழைப்பு
இலங்கையில் கடந்த காலம் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் இலங்கையின் பிள்ளைகளாக தம்முடன் ஒன்றிணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண கூட்டம் நேற்று (20.01.2024) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி
இந்த நாட்டினை தொடர்ந்து ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைத்து வழிகளிலும் நாசமாக்கியுள்ளனர்.

இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இதற்காக நாங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான விடயங்களை மறந்து ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்றிணைய முன்வரவேண்டும்.
இந்த நாட்டில் கடந்த ஆட்சியாளர்களின் பிரிக்கும் தந்திரம் ஊடாக இனரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிவுப்பட்டுள்ள அனைவரையும் நான் எனது கட்சி ஊடாக ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன்.
கடந்த காலத்தில் முறையான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இந்த நாடு குப்பைத்தொட்டியாக மாறியது.

நான் சுற்றாடல் அமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்த நாட்டினை தூய்மையான நாடாக மாற்றும் செயற்பாட்டை முன்னெடுத்தேன்.
இந்த நாட்டில் வெள்ளம் ஏற்படும்போது கொழும்பு பகுதிகள் பெரிதாக பாதிப்பக்கபடுவதில்லை.அங்கு முன்னெடுக்கப்பட்ட சிறந்த முறையான வடிகான்களே அதற்கு காரணமாகும்.

எனினும் அந்த திட்டங்கள் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இதனால் கிழக்கு மகாணம் வெள்ளத்தில் மூழ்குகின்றது” என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   | 

                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan