ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீட்க முடியும்! சம்பிக்க ரணவக்க
ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரித்தல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரச வருமானத்தை அதிகரித்தல் தொடர்பில் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டால் யோசனைகளை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க முடியும்.
செலவுகள் மற்றும் வருமானமீட்டல் என்பனவற்றை டிஜிட்டல் முறையின் ஊடாக மேற்கொள்வதன் மூலம் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பதிவாகும்.

டிஜிட்டல் முறை
வரி செலுத்த வேண்டிய நபர்களை சரியான முறையில் அடையாளம் காண வேண்டும்.
வரி அறவீட்டு முறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri