தேசிய மின்சார கட்டமைப்புக்கு ஏற்படப்போகும் மின்சார இழப்பு! சம்பிக்கவின் எச்சரிக்கை
தேசிய மின்சார கட்டமைப்புக்கு எதிர்வரும் காலங்களில் 250 ஜிகாவோட் மின்சாரம் இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல், மே, மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் சுமார் 250 ஜிகாவோட் மணிநேர மின்சாரம் இழப்பு ஏற்படலாம் என குறிப்பிடுகிறார்.
ஏற்படப்போகும் ஆபத்து
நெசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் தனியார் நிறுவனம் (NSO) மின் உற்பத்தி நிலைய முகாமைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள தரவுகளை கொண்டே சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவை அந்நிறுவனத்தின் மாதாந்திர புள்ளிவிவரங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நெசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் தனியார் நிறுவனம் (NSO) 2024-ஆம் ஆண்டின் இலங்கை மின்சார சட்டம் எண் 36-இன் கீழ் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் மார்ச் 9 2026 அன்று நிறுவப்பட்ட ஒரு இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாகும்.
மின் உற்பத்தித் திட்டமிடல் மின் உற்பத்தி நிலையங்களின் பொருளாதாரத்தை விரைவுபடுத்துதல் மற்றும் எதிர்கால உற்பத்தி மற்றும் பரிமாற்றத் திறனைத் திட்டமிடுதல் ஆகியவற்றுக்கு இந்நிறுவனம் பொறுப்பாகும்.
எது எப்படி இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரிப் பிரச்சினையை மூடிமறைக்க முடியாது என்றும் கூறினார்.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam