சாமர சம்பத் இன்று லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க இன்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.
ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, சாமர சம்பத் இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு முன்னிலையாக உள்ளார்.
விசாரணை தொடர்பில் ஏற்கனவே அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளின் ஓர் அங்கமாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.