ஜனாதிபதி கொஞ்சம் சிரிக்கவும்... அநுரவிடம் சாமர எம்.பி. கோரிக்கை
ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(22) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பழிவாங்கும் அரசியலைத் தவிர்த்து, பொறுமையுடனும் ஜனநாயக முறையிலும் ஆட்சி நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விலைக்கட்டுப்பாடு போன்ற விடயங்களைக் கொழும்பிலிருந்து இருந்தே செய்ய முடியும் என்றும், இதற்காக ஜனாதிபதி கொட்டும் மழையில் பிரதேசங்களுக்குச் சென்று பிரசாரங்களை மேற்கொள்வது அவசியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனாதிபதி என்பவர் குரோதத்துடனும், கோபத்துடனும் உரையாற்றுவதை விடுத்து, மக்கள் மத்தியில் ஒரு புன்னகையை மலரச் செய்யும் தலைவராக இருக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் முன்னாள் தலைவர்களைத் திட்டுவதையே தனது முக்கிய பணியாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இத்தகைய பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, பொறுமையுடன் ஜனநாயக முறையில் ஆட்சி நடத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கினார்.