சாமர சம்பத் தசாநாயக்கவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவின் விளக்க மறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சாமர சம்பத் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக பிரதம நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அரசாங்க பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.