நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாமர சம்பத்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
புதிய இணைப்பு
நீதிமன்றில் இன்று முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை,அடுத்த 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதல் இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க(Chamara Sampath Dassanayake) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று (01) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
