1.2 மில்லியன் ரூபாவாக அதிகரித்த விட்ஸ் கார் விலை: பதவி விலகுவேன்..! சவால் விடும் நளின் ஹேவகே
விட்ஸ் கார் ஒன்று 1.2 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தாம் ஒருபோதும் கூறவில்லை என பிரதியமைச்சர் நளின் ஹேவகே மறுப்புத் தெரிவித்துள்ளார்.
விட்ஸ் கார் ஒன்று 1.2 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் நளின் ஹேவகே கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக வாக்களித்து பதவிக்கு வந்த அரசாங்கம், வாகனங்களின் விலையை தாறுமாறாக அதிகரிக்க வழிசெய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சஜித்திற்கு நளின் சவால்
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த குற்றச்சாட்டுகளை பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நேற்று(20.05.2026) வன்மையாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

விட்ஸ் கார் ஒன்று 1.2 மில்லியனுக்கு விற்கப்பட்டதாக நான் ஒரு எந்தக் கட்டத்திலாவது கூறியுள்ளேனா என்பதை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகல் செய்வேன். அவரால் அதை நிரூபிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவரே பதவி விலகல் செய்ய வேண்டும் என நளின் சவால் விட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியினர் பொய்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியதுடன், அத்தகைய கூற்று ஒன்றை தாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு