வடக்கில் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துரைத்த ஆளுநர்
சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று(05.03.2024) கொழும்பு - சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறைக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதாரத்துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு நேர்ந்துள்ள கதி! முடிந்தால் காப்பாற்றுங்கள் - சட்டத்தரணி அதிர்ச்சித் தகவல்
ஆளணி வெற்றிடங்கள்
இந்நிலையில் வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபாலவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




