"யுவான் வாங் 05" விவகாரம்! இலங்கைத் தமிழர் பாதிக்கப்படக்கூடாது - கரூர் கண்ணதாசன்
இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கமாக காணப்படுகிறது என தி.மு.கவின் தொழிற்சங்க தலைவரும், வழக்கறிஞருமான கரூர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு யுவான் வாங் 05 என்ற சீனக்கப்பல் வருவது தொடர்பான சர்ச்சை நிலை நீடித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்த விடயத்தை சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எங்களுடைய பார்வையெல்லாம் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது, இலங்கை பாதிக்கப்படக் கூடாது என்பது தான். இலங்கை தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான்.
இலங்கை்கு யுவான் வாங் 05 கப்பல் வருகின்ற பிரச்சினை இன்றைக்கு சர்வதேச பிரச்சினையாக காணப்படுகிறது என கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தகவல்களுடன் வருகிறது சக்கரவியூகம் நிகழ்ச்சி,

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
