பிரமாணக் குறிப்புக்கு முரணான வடமாகாண அதிபர் நியமனம்...! இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநருக்கு கடிதம்
2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமனத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும், பாராபட்சத்தினாலும், அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்றுவரை கடமையேற்க முடியாமல் பல அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும், தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு, வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 2023.12.15ஆம் திகதி தொடக்கம் பல்வேறு திகதிகளில் இடநிலைப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தது.
நியமனம் வழங்கல்
அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 11 (பதவிகளுக்கு நியமித்தல்) இன் உப பிரிவு 3 இல் குறிப்பிட்டுள்ள சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முற்றாகப் புறந்தள்ளி - சேவை மூப்பு மற்றும் திறமை கருத்தில் கொள்ளாமல் மேற்படி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், அதிபராக, பிரதி அதிபராக, உதவி அதிபராக எழுந்தமானமாகவும், பாரபட்சமாகவும் குறித்த இடநிலைப்படுத்தல் நடைமுறைப்படுத்தமை குறித்தும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், சேவை மூப்பு மற்றும் திறமை கூடியவர்களை அதிபராக நியமிக்காமல் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளதன் மூலம், அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பை மீறுவது மட்டுமல்லாமல், பாரபட்சங்கள், தலையீடுகள் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை தோல்வி அடையச் செய்யும் செயற்பாடாகவும் சந்தேகிக்கின்றோம்.

அத்துடன் - வெளிமாவட்டத்தில் இடநிலைப்படுத்தப்பட்ட அதிபர் சேவையைச் சேர்ந்த சிலரை அரசியல் தலையீடு மற்றும் பல்வேறு வகையான செல்வாக்கின் அடிப்படையில், மருத்துவ சபையின் தீர்மானமின்றி அவர்கள் கடமையேற்று சில வாரங்கள் மற்றும் மாதங்களில் மருத்துவக் காரணம் என்ற சோடிக்கப்பட்ட காரணங்களை உருவாக்கி, அவர்களுக்கு சொந்த வலயம் மற்றும் சொந்த மாவட்டத்திற்கு தன்னிச்சையாக இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள அதிபர்கள்
அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு முரணாகவும், பாரபட்சங்களாகவும் இடநிலைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டமையால் பாதிக்கப்பட்ட குறித்த தொகை அதிபர்கள் இன்று வரை கடமையேற்க முடியாமல் உள்ளமை தொடர்பிலும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.
பாதிக்கப்பட்ட அக்குறித்த தொகை அதிபர்களின் விடயத்தை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையிலும், நியாயமான முறையிலும் பரிசீலித்து - அக்குறித்த தொகை அதிபர்களும் கடமையேற்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்." என குறிப்பிட்டுள்ளனர்.
இவிவிடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிபர் ஒருவர் ஐனாதிபதி செயலகத்திற்க்கும் முறைப்பாடொண்றை முன்வைத்து ஆளுநரின் கவனத்திற்க்கு ஐனாதிபதி செயலகத்தாலும் குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வடமாகாணம் கல்வியில் கடந்த க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் பாரிய பின்னடைவுகளைசந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கையாலாகாத ஆளுநர் ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கங்கள் போன்ற பல அமைப்புக்களின் முறைப்பாடுகளை தாண்டியும் கல்வியமைச்சின் செயலாளருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தினறி வருகின்றார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri