இங்கிலாந்தின் மன்னருக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் இலங்கை தேயிலை
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் இந்த வாரம் லண்டனில் (London) நடைபெற்ற விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னரை(Charles III)சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மன்னர் நுவரெலியா மற்றும் மெக்வூட்ஸ் தேயிலை தோட்டத்திற்கு தாம் மேற்கொண்ட விஜயத்தை அவர்களிடம் நினைவு கூர்ந்துள்ளார்.
தேயிலை விநியோகம்
அத்துடன் இலங்கையில் இருந்து தமக்கு வழக்கமான தேயிலை விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பிரித்தானியாவிற்கு சென்ற பின்னரும் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாத உயர்ஸ்தானிகர் போகொல்லாமக, இந்த மாத இறுதியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து அதனை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
