கொழும்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்:ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள கடிதம் (Video)
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் இப் போராட்டமானது கொழும்பு - செத்தம் வீதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி இருப்பதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம் |
ஜனாதிபதி கடிதம் கையளிப்பு
எனவே இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதுடன். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் கோரிக்கை கடிதம் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.