எரிசக்தி அமைச்சரின் திட்டத்திற்கு எதிராக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் போராட்டம் (Video)
நாட்டின் கனிய வளங்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும், விற்பதற்கு எதிராகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் 11 தொழிற்சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அமைச்சரின் திட்டம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் முன்வைக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சரின் இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிற்சங்கங்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
