இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்: கஞ்சன விஜேசேகர
அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் முன்வைக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
CPC Trade unions affiliated to all political party’s are to oppose the proposed reforms. Met all Unions, discussed proposed reforms & conveyed its importance.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 21, 2022
Protest March against reforms to take place tomo.
CPC & CPC reforms are a must & will continue to work to implement it. pic.twitter.com/CKjBx9RWTo
ஏழு பேர் கொண்ட குழு
இலங்கை மின்சார சபையையும் மறுசீரமைப்பதற்காக அமைச்சர் அண்மையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.
பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு இந்தக் குழு பணிக்கப்பட்டுள்ளது,
பெட்ரோலியம் மற்றும் மின்சாரம்
போராட்டம் நடத்தும் உரிமைக்கு சவால் விடுக்கவில்லை, ஆனால் பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும், அதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
