எதனை நம்புவது? முரண்பட்ட அறிவிப்புகளால் தடுமாறும் பொதுமக்கள்!
மின்சார விநியோகம் தொடர்பில், பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆணைக்குழுவின் அறிக்கைகள் முரண்பட்டவையாக அமைந்துள்ளமையால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சாரசபையின் செயற்பாடுகளுக்கும் ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கும் முரண்படுகின்றன.
எனவே எதனை நம்புவது என்பதில் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமையன்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சார விநியோகத்தடை இருக்காது என்பதை உறுதிசெய்தார்.
எனினும் இரண்டு நாட்கள் கழிந்தநிலையில், இலங்கை மின்சாரசபை, தினமும் 45 நிமிடங்கள் மற்றும் 1 மணிநேரம் மின்சார விநியோகத்தடையை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று எதிர் அறிவிப்பை வெளியிட்டார்.
அத்துடன் நிற்காமல், நேற்று அவர் விடுத்த அறிக்கையில், மின்சார விநியோகத்தடை எதுவும் இல்லை ஆனால் தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவதற்காக பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை சில பகுதிகளில் இடையிடையே தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
எனவே எதுவும் நடக்கும் வகையில் பார்த்துவிட்டு முடிவெடுப்பது சிறந்தது என்று பொதுமக்கள் கருத்துரைப்பதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன



