நல்லூரில் ஆரம்பமாகவுள்ள நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி
நல்லூரில் நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகிறது.
அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளுக்கமைவாக மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பயிற்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
குறித்த பயிற்சிகள் மூன்று மாத காலம் 60 மணித்தியாலங்கள் சனி ஞாயிறு 6.00 - 8.30 வரை நடைபெறும்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள முற்றம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கு கொள்பவர்களுக்கான வயதெல்லை 20 - 45 ஆகும்.
இதன்போது, பாலர்பாடசாலை ஆசிரியர்கள், ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சியில் பங்கு கொள்ளலாம் என தெரிவக்கப்பட்டுள்ளதுடன் பயற்சி செயல்முறை சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் நல்லூர் நாடகத் திருவிழாவில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெறுவதுடன் பயிற்சி இலவசமாக நடைபெறும்.
நல்லூர் நாடகத் திருவிழா
இதன்போது, பதிவு செய்வதற்காக ரூபா 2000 கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்வதற்கான வட்சப் இலக்கம் 0094773112692 சுயமாக தயாரிக்கப்பட்ட சுயவிபரக்கோவையை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சியில் உள்ளடங்கள்களாக நாடகக் கோட்பாடுகள், நடிப்பு பயிற்சி, நாடகம் எழுதுதல், நாடக நெறியாள்கை, நாடகப்படைப்பாக்கம் மற்றும் சிறுவர் நாடகத் தயாரிப்பு ஆகியன காணப்படுகின்றன.