திடீரென பதவி விலகிய எக்ஸ் தளத்தின் தலைமை அதிகாரி
சமூக ஊடக தளமான எக்ஸின் (X) தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் X இன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் "இந்த நிறுவனத்தின் அசாதாரண பணியை நிறைவேற்றுவது ஒரு வாழ்நாள் வாய்ப்பாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
விலகலுக்கான காரணம்
பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பது, நிறுவனத்தையே மாற்றுவது மற்றும் Xஐ எவ்ரிதிங் (X everything) செயலியாக மாற்றுவது போன்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியோடு இருக்கிறேன்.
எங்கள் பயனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், விளம்பரதாரர் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் தேவையான முக்கியமான ஆரம்பகால வேலைகளுடன் நாங்கள் ஆரம்பித்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
After two incredible years, I’ve decided to step down as CEO of 𝕏.
— Linda Yaccarino (@lindayaX) July 9, 2025
When @elonmusk and I first spoke of his vision for X, I knew it would be the opportunity of a lifetime to carry out the extraordinary mission of this company. I’m immensely grateful to him for entrusting me…
இரண்டு ஆண்டுகள், எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்து வந்த அவர் தற்போது விலகுவதாக அறிவித்துள்ளதுடன் அதற்கான காரணங்கள் எதனையும் அவர் குறிப்பிடவில்லை.

செம்மணி குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! தகவலறிந்தவரை பின்தொடரும் புலனாய்வுப்பிரிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
