மத்திய வங்கி மோசடியை விடவும் பாரிய மோசடி குறித்த தகவல்கள் அம்பலம்!
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளை விடவும் பாரியளவான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதியத்தின் பணம் உரிய முறையில் முதலீடு செய்யப்படாத காரணத்தினால் நாட்டுக்கு பாரியளவு தொகை நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 2800 பில்லியன் ரூபா பணம் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி நிதி மோசடியை விடவும் இந்த நட்டம் பெரியது எனவும் மற்றுமொரு தனியார் நிறுவனத்தினால் 1265 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.