நிறைவுக்கு வந்த மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களின் போராட்டம்
மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்கள் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டமானது வெற்றியடைந்துள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் நிறைவுக்கு வந்துள்ளது.
மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 136 பேர், தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்திருந்தனர்.
ஆசிரியர்களாக நியமனம்
அண்மையில் ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக அவர்கள் போராட்டம் நடத்திய வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆளுநர் கவனத்திற்கு விடயத்தை எடுத்துச் சென்றிருந்ததுடன், ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இதுவரை காலமும் ஆசிரிய உதவியாளர்களாக செயற்பட்ட 136 பேருக்கு மத்திய மாகாண ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri