மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
மலையக மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகளில் தடங்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாகவே வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஓஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக, கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் தொடருந்து ஓஹியா தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே தொடருந்து ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலையக தொடருந்து பாதையை சீரமைக்க சுமார் 3 மணித்தியாலங்கள் தேவைப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு மற்றும் பாறைகள் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan