வவுனியாவில் ஆரம்பமான தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கடசியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.





பிரித்தானியாவில் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு News Lankasri
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri