இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
பொதுமக்களின் பணத்தை மிகவும் நுட்பமான மற்றும் மோசடியான முறையில் சுரண்டும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.
இதுபோன்ற 23 நிறுவனங்கள் முன்னர் அடையாளம் காணப்பட்டதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதன் இணைப்பு வலைத்தளங்களான icanonlineadvertising.com, bannercuts.com, bannercuts.lk, bannercuts.net மற்றும் bannercuts.org ஆகியவை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை இயக்குவதாகவும் ஊக்குவிப்பதாகவும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிரமிட் திட்டங்கள்
இலங்கை மத்திய வங்கி நீண்டகால விசாரணையை நடத்தி, பல பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்த பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டது.

இந்த பட்டியலில், Tiens Lanka Health Care (Pvt) Ltd, Best Life International (Pvt) Ltd, Global Lifestyle Lanka (Pvt) Ltd, OnmaxDT, MTFE App, Qnet/ Questnet. Mark – Wo International, V M L International, Fast3Cycle International, Sport Chain app, Fastwin (Pvt) Ltd, Fruugo Online App, Ride to Three Freedom (Pvt) Ltd, Era Miracle (Pvt) Ltd, Genesis Business School, Ledger Block, Isimaga International (Pvt) Ltd, Beecoin App, Sunbird Foundation, Windex Trading, Smart Win Entrepreneur (Pvt) Ltd, Net Fore International (Pvt) Ltd/ Netrrix, Pro Care (Pvt) Ltd, SGO (sgomine.com) ஆகியவை அடங்கும்.
சட்டவிரோத நடவடிக்கை
“இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை இயக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளன. எனவே இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக் ஏமாற என வேண்டாம்” என மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் பிரிவு வலியுறுத்துகிறது.

இத்தகைய தடை செய்யப்பட்ட வலையமைப்புகளை ஊக்குவிப்பது அல்லது ஈடுபடுவது ஒரு சட்டவிரோத நடவடிக்கை என்பதை மத்திய வங்கி பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri