மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி
நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி என சுதந்திர மக்கள் காங்கிரசின் செயற்குழு உறுப்பினர், சிரேஷ்ட விரிவுரையாளர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரசின் தலைமைக் காரியாலத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள், சம்பளத்தை உயர்த்துமாறு போராட்டங்களை நடத்தியும் அதற்காக பணம் இல்லை என அரசாங்கம் அறிவித்தது.
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்
இருப்பினும், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் மாத்திரம் 73 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாடசாலை மாணவர்களின் உணவுக்கான 85 ரூபாவை 20 ரூபாவினால் அதிகரிக்க தம்மிடம் பணம் இல்லை என்று கூறிய திறைசேரிக்கு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை காலவரையறையின்றி உயர்த்துவதற்கு பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |