மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உள்ளகப் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களைக் குறைத்துக் கொள்ள முடியும்
உள்ளகப் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரதான நோக்கமென சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இம்முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் பெரும்பாகப்பொருளாதாரக் குறிகாட்டிகளை மேம்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், அதன்மூலம் எதிர்வருங்காலங்களில் முன்நோக்கிப் பயணிக்கும்போது ஏற்படத்தக்க அச்சுறுத்தல்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை சர்வதேச கடன்வழங்குனர்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் சர்வதேச கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எந்தவொரு எதிர்மறைத்தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி அச்செயற்திட்டம் வெளிப்படையானதும் ஒப்பீட்டு ரீதியானதுமான கருத்தியல்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.