மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி நிலை மேலும் உக்கிரமடைந்திருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. அச்சந்தர்ப்பத்தில், கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே நடைபெற்றது.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்திருக்காவிட்டால் நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும்.
இதேவேளை, அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
