பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.
அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலையியற் குழுக்கள் நியமனம்
இதேவேளை, நிலையியற் கட்டளைகளில் திருத்தம் செய்து, துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், நாடாளுமன்றக் குழு அமைப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் மூன்று நிலையியற் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
இதேவேளை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனவும், வரவு செலவுத் திட்ட உரை பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டெம்பர் 1ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
