இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நிலை : மின் கட்டணம் கடுமையாக அதிகரிக்கும் சாத்தியம்..
ஒப்பீட்டளவில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு கூடுதலாக காணப்படுகின்றது. இதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் மின் கட்டணங்களும் கடுமையாக உயரக் கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை மத்திய வங்கி தன்னுடைய சுயாதீன தன்மையை இழந்துள்ளதாகவும் ரவி கருணாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கியின் தற்போதைய நிலை
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொள்ளும் போது மத்திய வங்கி சுயாதீனமாக செயல்படுவது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருமான வரி சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த வருமான வரி சட்டம் ஏற்புடையது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாமாக முன்வைக்கும் மதிப்பீட்டுக்கு அமைய வரி விதிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஒப்பீட்டளவில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு கூடுதலாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணங்களும் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான முனைப்புகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri