எரிபொருள் விலையை மீள்திருத்தம் செய்ய நடவடிக்கை! - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
உலக சந்தையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருட்களின் விலையை மீள்திருத்தம் செய்ய மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருக்கின்றார்.
நேற்று மத்திய வங்கியின் ஆளுனர் டபிள்யூ.டி.லட்சுமன் உள்ளிட்ட மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர் .
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் கலந்து கொண்டார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், மத்திய வங்கியுடன் இவ்வாறான வெளிப்படையானதும் ஆரோக்கியமானதுமான கலந்துரையாடல்கள் நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு வழி வகுக்கும் என குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையை தீர்மானிப்பதில் மத்திய வங்கியின் பங்கு முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் எரி பொருளுக்கான விலை நிர்ணயம் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி முடிவை மத்திய வங்கிக்கு தெரிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.