நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
மோசடி நடவடிக்கைகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக செயற்படுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு தெரிவித்து பாரிய மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாரியளவில் அதிகரித்துள்ள மோசடி

இது போன்ற மோசடிகள் மூலம் தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் மிக பாரியளவில் அதிகரித்துள்ளது.
எனவே, முறையான சரிபார்த்தலின்றி குறித்த தகவல்களின் அடிப்படையில் இனந்தெரியாத தரப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் என்றும் அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை வலியுறுத்துகின்றது.
மாறாக இதுபோன்ற குறுஞ்செய்திகள் , மின்னஞ்சல் செய்திகள் கிடைக்கப் பெற்றால், நிதியியல் உளவறிதல் பிரிவின் 011-2477125, 011-2477509 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri