மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கடனை மறுசீரமைக்காவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதனை செலுத்துவதில் சிரமம் இருப்பதால் கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்களால் அப்படியே செலுத்த முடியாததால், எங்களுக்கு கடன் வழங்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரிடமும், அதற்கான நிவாரணம் வழங்குமாறும் அந்தந்த அரசுகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.
நாடுகள் வழங்கியுள்ள உறுதி
செயல்பாட்டின் முதல் படி கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் முதன்மை சான்றிதழ் ஆகும். நமது கடனை நிலையானதாக மாற்றுவதற்கான இலக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தில் உள்ளன. அந்த நிலையான நிலையை அடைய, ஒவ்வொரு நாடும் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன.
அடுத்த கட்டமாக அந்த உத்தரவாதத்தின் பிரகாரம் பேச்சுவார்த்தை நடத்தி வருடத்திற்கு 06 பில்லியன் என்ற வீதத்தில் நாம் செலுத்த வேண்டிய கடனை இந்த நேரத்தில் செலுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.