மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்
நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்களை விட அதிக வட்டி விகிதத்தை வணிக வங்கிகள் வசூலித்தால், அதுகுறித்து “1935” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு அளிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அலுவலக நேரங்களில் மேற்கண்ட இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு வாணிக வங்கியும் அதிக வட்டி வசூலித்தால், வாடிக்கையாளர்களுக்கு வேறு வங்கியைத் தேர்வு செய்யும் சுதந்திரம் இருப்பதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மே மாதத்தில் ஒருநாள் கொள்கை
இலங்கை மத்திய வங்கி, கடந்த 2025ஆம் ஆண்டிலும், நடப்பு 2026ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியிலும் தன் தளர்வான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து பேணிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டு 7.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டதுடன், அதன்பிறகு அதே நிலைத் தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri