வெளிநாட்டு இருப்புக்களை பாதுகாக்க மத்திய வங்கி நடவடிக்கை
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200ஐ அடைந்த நிலையில் வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாப்பதற்கும், ரூபாயை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் அபிவிருத்தி முறிகளுக்கு செலுத்த வேண்டிய நிதிகளை தாமதம் செய்வதும் உள்ளடங்கும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் நீண்ட கால நெகிழ்வுப் போக்குக்கொண்ட கடன்களை ஏற்பாடு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு இருப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்தநிலையில் அடுத்த சில மாதங்கள் வெளிநாட்டு இருப்புக்களை பராமரிப்பதிலும், அமெரிக்க டொலருக்கு எதிராக மதிப்புள்ள ரூபாயை பாதுகாப்பதிலும் நடவடிக்கைகள் அவசியம் என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan