ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடவுள்ள அமெரிக்கா! சென்ட்காம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..
ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் போக்குவரத்திற்கான முற்றுகை, திங்கட்கிழமை காலை 10:00 ET (14:00 GMT) மணிக்குத் தொடங்கும் என்று அமெரிக்காவின் ஒரு முக்கிய இராணுவ கட்டளை அமைப்பான சென்ட்காம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் வெளியான ஒரு பதிவில், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் எதிராக பாரபட்சமின்றி இந்த முற்றுகை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் முற்றுகை
ஈரானிய அல்லாத துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் தடுக்க மாட்டோம் என்றும் அது கூறுகிறது.
— U.S. Central Command (@CENTCOM) April 12, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தீர்வைக் காணத் தவறியதே, கடந்த வார இறுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிந்துபோனதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு,தனது Truth Social தளத்தில், ஹோர்முஸ் நீரிணையில் நுழையவோ வெளியேறவோ முயற்சிக்கும் அனைத்து கப்பல்களையும் தடுக்கும் செயல்முறையை அமெரிக்கா தொடங்கும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் கடற்படை (Islamic Revolutionary Guard Corps) ஹோர்முஸ் நீரிணையை அணுகும் எந்த ஈராணுவ கப்பல்களும் போர்நிறுத்தத்தை மீறுவதாக கருதப்பட்டு, கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri