நாட்டு மக்களுக்கு மறைக்கப்பட்ட கோட்டபாய, மஹிந்தவின் கொண்டாட்டங்கள்
இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வீட்டில் புத்தாண்டு சம்பிரதாயங்கள் மேற்கொண்ட முறை தொடர்பில் எவ்வித நேரடி ஒளிபரப்புகளும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு பிரமாண்டமான முறையில் இடம்பெறுவது வழமையாகும்.
விசேடமாக பிரதமர் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றும் காட்சி நேரலையாக ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி சேவைகள் பல நடவடிக்கை மேற்கொள்ளும்.
இம்முறை தேசிய தொலைக்காட்சியினால் கால்டன் வீட்டில் (பிரதமர் வீடு) புத்தாண்டு சம்பிரதாயங்கள் ஏனைய வருடங்கள் போன்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக ஒளிரப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan