றீ(ச்)ஷாவில் மாபெரும் இயேசு பாலன் பிறப்பு கொண்டாட்டம் (PHOTOS)
இன்றைய தினம் உலக வாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மனிதகுலத்தை பாவத் தளையிலிருந்து மீட்க மனித ரூபத்தில் பூவுலகில் அவதரித்த இறைமகன் இயேசு உலக அமைதியின் அடையாளமாக திகழ்கின்றார்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களிடத்தில் அன்பையும் நல்வாழ்த்துக்களையும் பரிசுப் பொருட்களையும் பகிர்ந்துகொள்ளும் நன்னாளாக கிறிஸ்து பிறப்பு நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில்,கிளிநொச்சியில் - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் கிறிஸ்மஸ் தின நிகழ்வுகள் மிக கோலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, இன்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நத்தார் கொண்டாட்ட நிகழ்வுகள் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெறவுள்ளன.
குறித்த தினத்தில் விளையாட்டுக்கள், பாடல் போட்டிகள் மற்றும் விருந்தோம்பல்கள் என்பனவும் இடம்பெறவுள்ளதுடன்,மாபெரும் நத்தார் தின கொண்டாட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளர்.
தொடர்புடைய செய்தி....
றீ(ச்)ஷாவிலும் மாபெரும் நத்தார் தின கொண்டாட்டம்! (Photo)






அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
