100வது நாளை தாண்டிய காலிமுகத்திடல் போராட்டம்(Video)
கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான கோட்டா கோ கம போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவுசெய்துள்ளது.
இந்த அறவழிப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட நிகழ்வு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில்இருந்து பதவி விலகுமாறு வலியுறுத்தி இளைஞர் குழுவால் இப்போராட்டம்ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் மூலம் தங்களது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.
சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள்
இதன்போது, இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100ஆவது நாள் நிறைவு
விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
