சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவும்!இந்துக்களிடம் கோரிக்கை
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு காவல்துறையினர் இந்துக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்றை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாடி மகிழுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் காரணமாக, கடந்த காலங்களில் ஏனைய இன, மத மக்களின் கொண்டாட்டங்களும் மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதே வகையில், நாளைய தினம் தைப்பொங்கல் பண்டிகையும் கொண்டாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் கோயில் வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒரு நேரத்தில் 25 பேர் என வரையறைக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
