சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள்! - நாட்டு மக்களிடம் கோரிக்கை
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரால் இந்து பக்தர்களிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு வீடுகளிலேயே குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் மட்டும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பின்னணியில் தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுடன் பின்பற்றுமாறு இந்து மதத் தலைவர்களும் கோரியுள்ளனர்.
இதேவேளை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூலம் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கோவிட் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சாத்தியம் 90 வீதத்தினால் குறைகின்றது ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவ்கே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 12 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
