இலங்கை மின்சார சபையின் புதிய தீர்மானம்
இலங்கை மின்சார சபையின் (CEB) பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவினை கைவிடுவதற்கு இணங்கியுள்ளன.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்புரையின் பேரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கும் மின்சாரசபை
இத்தீர்மானத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.
இது இலங்கை மின்சார சபையின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் பில்லியன் கணக்கான ரூபாயைச் சேமிக்க உதவும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார நெருக்கடி
இலங்கையில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மின்சார சபை உள்ளதுடன், நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனமாக கருதப்படுகிறது.
மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு உட்பட, மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.