மன்னார் பூநகரி பகுதிகளை இலக்கு வைத்த அதானி! இலங்கையில் அதானி குழுமத்தின் திட்ட விஸ்தரிப்புக்கள்
அதானியும் இலங்கையும்
இந்தியாவின் அதானி குழுமம், மன்னார் மற்றும் பூநகரியில் மொத்தம் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது மாத்திரமல்லாமல் பின்னர், இலங்கையில் தமது திட்டங்களை மேலும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் அதானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீநீட் ஜெய்ன், இலங்கை திறைசேரியின் முன்னாள் செயலாளர் ஏ. ஆர் ஆட்டகலவுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையின் எரிசக்தி தேவைக்கு ஏற்ப, 1000 மெகாவோட் திட்டங்களை அமைக்கவும் தமது நிறுவனம் தயார் என்று அறிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் முதலீடு
ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில், வெஸ்ட் கென்டெய்னர் இன்டர்நேஷனல் டெர்மினல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரியில் 150 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் 100 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கு 442 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னாரில் 330 ஹெக்டேயரில் 250 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் இந்த திட்டங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு அறிவுறுத்தியதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
பெர்டினாண்டோவும் கோட்டாபயவும்
கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி திறைசேரியின் முன்னாள் செயலாளர் ஆட்டிகலவுக்கு, மின்சார சபையின் முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ எழுதிய கடிதத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ ஜூன் 13 அன்று, கோப் என்ற பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 நவம்பரில் தன்னை வரவழைத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதானி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தம்மை கோருவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை கோட்டாபய ராஜபக்ச, மறுத்திருந்த நிலையில், பெர்டினாண்டோ, உடனடியாகவே பதவி விலகிவேண்டிய நிலை ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
